
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கடவுள் ஒருவரே அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கிறார். அவரது புகழ் மட்டுமே மாறாமல் நிலைத்திருக்கும்.
* சாந்த குணம் கொண்டவனுக்கு யாரிடமும் வெறுப்பு உண்டாகாது. அனைவரையும் நண்பர்களாகவே கருதுவான்.
* நல்லெண்ணம் கொண்டவன் மற்றவர்களுடைய குற்றம், குறைகளைப் பொருட்படுத்த மாட்டான்.
* கடவுள் மீது பக்தியும், நல்லொழுக்கமும் அமைந்து விட்டால் வாழ்வில் துன்பத்திற்கு இடமிருக்காது.
* பணவசதி இருந்தாலும் எளிமையைக் கடைபிடித்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருங்கள்.
- ஜெயேந்திரர்